காவிரி விவகாரம் : மே 15ல் விவசாயிகள் கடலில் இறங்கி போராட்டம்

--

திருச்சி

த்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரும் 15ஆம் தேதி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் எங்கும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.    இந்த போராட்டங்களை விவசாயிகள், பொதுமக்கள் எதிர்க்கட்சியினர்,  சமூக ஆர்வலர்கள், நடிகர்கள்,  என பல தரப்பட்டோரும் நடத்தி வருகின்றனர்.   ஆனால் இதுவரை மத்திய அரசாங்கம் இது குறித்து எந்த ஒரு தீர்மானமான பதிலையும் தெரிவிக்கவில்லை.

விவசாய சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக் குழு திருச்சியில் கூட்டம் ஒன்றை நிகழ்த்தியது.  இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகம் துரோகம் செய்து வருவதாகக் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.   வரும் 15ஆம் தேதி அன்று கடலில் இறங்கி தற்கொலைப் போராட்டம் நடத்தப்போவதாக இந்த சஙகங்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.