ஸ்ரீநகர் தொகுதியில் குலாம் நபி ஆசாத் போட்டி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் – பரூக் அப்துல்லா கட்சி இடையே கூட்டணி

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின்  தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என்றும், ஸ்ரீநகர் தொகுதியில்  தான் போட்டியிடுவதாகவும்  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி இடையே கூட்டணி முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும், பாகிஸ்தானின் எச்சரிக்கையை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானில்,  மதசார்பற்ற அமைப்புகளை வலுப்படுத்த  இநத்  கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

ஜம்மு மற்றும் உதாம்பூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்என்றும், ஸ்ரீநகர் தொகுதியில் தான் (குலாம் நபி ஆசாத்) போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்,  ஆனந்த்நாக் மற்றும் பாரமுல்லா தொகுதியில் நட்பு ரீதியிலான போட்டியிருக்கும். அதாவது இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சாடாமல் போட்டியில் இருக்கும். யார் வெற்றிப்பெற்றாலும், எங்களுக்கான வெற்றிதான் என்று கூறியவர்,  லாடக் தொகுதி தொடர்பாக  ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.