பாஷிச பாஜக விமர்சனம்…..ஷோபியா கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை:

தமிழிசையுடன் தகராறு செய்த ஷோபியா கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் தமிழிசையுடன் விமானத்தில் தகராறு செய்து பாஷிச பாஜக என்று கூறிய ஷோபியா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?. நானும் சொல்கின்றேன். பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக’’ என்று குறிப்பிட்டுள்ளார்.