வேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்

பெர்த்,

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

24vzgss02-maste_25_2522845e

வேகநடைப் போட்டியில் தங்கம் இந்தியாவை சேர்ந்த  92 வயதான இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி முதலில் வந்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டியும் ஒன்று.  இதில், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு (விசாகப்பட்டினம்) கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்து,  தங்கம் வென்றார்.

மேலும், இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் ஸ்ரீராமுலு கலந்துகொள்கிறார்.

இவர் இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.