விரைவான 50 விக்கெட்டுகள் – ரபாடா சாதனை!

ஷார்ஜா: சென்னைக்கு எதிராக நடைபெற்ற 34வது ஐபிஎல் போட்டியில், விரைந்த 50 விக்கெட்டுகள் என்ற சாதனையைப் புரிந்துள்ளார் டெல்லி அணியின் ரபாடா.

இவர், மொத்தம் 27 போட்டிகளில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதன்மூலம், 32 ஐபிஎல் போட்டிகளில் 50 விக்கெட் சாதனையை செய்திருந்த கொல்கத்தா அணியின் சுனில் நரைனின் சாதனையை முறியடித்துள்ளார் ரபாடா.

‍நேற்று சென்னைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஃபாஃப் டூ பிளசிஸை அவுட்டாக்கியபோது இவரின் கணக்கில் 50 விக்கெட்டுகள் சேர்ந்தன.

இதுமட்டுமல்ல, குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையும் இவருக்கு கிடைத்துள்ளது. அதாவது, மொத்தம் 616 பந்துகளில் இவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்னர் மும்பை அணியின் லசித் மலிங்கா 749 பந்துகளில் இந்த சாதனையை செய்திருந்தார்.