உண்ணாவிரதம் : டில்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி

ளுநர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டில்லி அமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டில்லி அரசு அதிகாரிகள் ஒத்துழையாமைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் டில்லி முதல்வர், துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் டில்லி சுகாதார அமைச்சரான சத்யேந்தர் ஜெயின் கடந்த ஒரு வார காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளார்.

நேற்றிரவு திடீரென சத்யேந்தர் ஜெயினுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பு அடைந்தது.   அதனால் அவர் உடனடியாக லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.