விரதம் இருக்கும்  காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே மிகவும் உயர்வானதாகும்.அவ்வாறு இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் எடுத்துக் கொள்ளலாம்.

சமஸ்கிருத மொழியில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள் ஆகும்.

பழத்தை உணவாக எடுத்துக் கொள்வதே பலகாரம் என்பதாகும்.

இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களை எடுத்துக் கொள்வது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் அர்த்தம்.

இவ்வாறு செய்வது உண்மையான விரதமாக இருக்காது.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கம். எனவே டிபன் வகையைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே உண்மையான விரதமாகும்.

விரதங்களும் அதன் பலன்களும்;

விரதம், அதாவது நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர் என்பதே உண்மை. மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதமாகும். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் இருக்கின்றன.

கிழமையும் விரதமும்;

திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவானின் பரிபூர அன்பைப் பெற முடியும்.
செவ்வாய் கிழமை கணவன் மனைவி பிரச்னை நீங்கி சேர்ந்து வாழலாம்.
புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் அகலும்.
வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை அடைந்து, நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். எனவே உங்களுக்கு எந்த விரதம் ஏற்றது என்பதை நீங்களே முடிவு செய்து அதன் பலன்களைப் பெற்றிடுங்கள்.!