பாரீஸ்:

உலக நிதித்துறை முறைக்கு கேடு விளைவிக்கும் தீவிரவாத நிதியுதவி மற்றும் பண பரிவர்த்தனையை 2 மாதங்களுக்குள் தடுக்க முழு அரசு இயந்திரத்தை முடுக்கிவிடுமாறு, பாகிஸ்தான் நாட்டை பாரீசிலிருந்து இயங்கும் நிதி நடவடிக்கை அதிரடிப் படை எச்சரித்துள்ளது.


நிதி நடவடிக்கை அதிரடிப் படையின் கூட்டம் பாரீசில் நடந்து வருகிறது.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த 10 அம்ச கோரிக்கைகளில் 27 இலக்குகளை எட்டுவதே பாகிஸ்தானின் இலக்காக இருப்பதாகவும், ஜமாத் உத் தாவா, ஃபலா இ இன்சான்யத் பவுன்டேஷ் ஆகியவற்றை, இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் தடை செய்திருப்பதாக  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலில் 44 வீரர்கள் உயிர் தியாகம் செய்ய காரணமாக இருந்த ஜெய்ஸ் இ முகமது உட்பட 6 இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கும் பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கை இந்தியாவுடன் நிதி மற்றும் ராஜ்ய ரீதியிலான நட்பை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நிதி நடவடிக்கை அதிரடிப் படை, இத்தகைய நடவடிக்கை உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பணம் இல்லை என்றால் தீவிரவாதம் இல்லை என்பது இதிலிருந்து புலனாகிறது.  ஆசிய பசிபிக் குழுவில் சமர்ப்பிக்கப்படும் பாகிஸ்தானின் நடவடிக்கை அறிக்கையை சர்வதேச கூட்டுறவு மறுஆய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.

போலி கணக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட 6 வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 109 வங்கிகள் விசாரணையில் உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் சந்தேகத்துக்கிடமாக 8,707 பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

உலக நிதித்துறை முறைக்கு கேடு விளைவிக்கும் தீவிரவாத நிதியுதவி மற்றும் பண பரிவர்த்தனையை 2 மாதங்களுக்குள் தடுக்க முழு அரசு இயந்திரத்தை பாகிஸ்தான் முடுக்கிவிட வேண்டும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.