சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு!

சென்னை:

சாத்தான்குளத்தைச் சேர்ந்த, சென்போன் கடை வியாபாரியான தந்தை மகன், கோவில்பட்டி சிறையில் வைத்து கடுமையாக  காவல்துறையினர் தாக்கியதால், உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த  பென்னிக்ஸ் (31) அங்கு  கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ்யும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.

காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் நிலையில் பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும் , அவர்களது நெஞ்சு மற்றும் உடலில் சரமாரியாக மிதித்ததாகவும்,  அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவது மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்த னர். அங்கு திடீரென அவர்கள்  இருவருக்கும் நெஞ்சவலி என்று கூறிய காவல்துறையினர், அவர்களை  பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் ஆங்காங்கே  சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து,  கோவில்பட்டி கிளைச்சிறையில்  2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் வணிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும் என என தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.

மேலும், சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.