தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. 

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான குமார்.   இவரும், இவரது 22 வயதான மகன் காளிதாஸ் என்பவனும் அப்பகுதியில் வசிக்கும் மனவளர்ச்சி குன்றிய 32 வயதான ஒரு பெண்ணை தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தந்தை, மகன் இரட்டையரின் தொடர் வெறிச்செயலால் அப்பெண் நான்கு மாத கர்ப்பிணியாகியுள்ளார்.  இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அப்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம் குறித்து அந்தப் பெண்ணின் சகோதரன் கொடுத்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) தமிழரசி வழக்குப் பதிவு செய்து இக்கொடூர பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கடந்த 11-ம் தேதி கைது செய்து அவர்களைத் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்துள்ளார்.

இந்நிலையில், தந்தை, மகன் இருவரையும் திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் அரியலூர் எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், அரியலூர் ஆட்சியர் த.ரத்னா குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.

மகனுக்கு நல்வழி காட்ட வேண்டிய தந்தையே அச்சிறுவனுடன் சேர்ந்து இப்பாதகச்செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் வேதனையான விசயமாகும்.

– லெட்சுமி பிரியா