மீண்டும் காவல்துறை வசமானது சாத்தான்குளம் காவல் நிலையம்!

மதுரை:

சாத்தான்குளம் காவல்நிலையம் கடந்த சில நாட்களாக வட்டாட்சியர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், மீண்டும் காவல்தறையினரிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தர விட்டு உள்ளது. இதையடுத்து சாத்தான்குளம் காவல்நிலையம் மீண்டும் காவல்துறை யினரிடம் ஒப்படைக்கப் பட்டது.

ஊரடங்கை மீறியதாக வணிகர்களான தந்தை மகனை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர், அவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதால், அவர்கள் இருவரும் பரிதாபகமா உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்  ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையத்தை உடனே  வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப் பாட்டில் கொண்டுவர மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஆவணங்களை யும் உடனே கைப்பற்றவும் உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு வட்டாட்சியர் செந்தில்ராஜன் நியமிக்கப்பட்டார். அவரது கண்காணிப்பில் கடந்த சில நாட்களாக காவல்நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது, சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசன் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் ஆஜராகி, சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவர்களை விசாரணையை முடித்து விட்டனர். தடவியல் அறிவியல் துறை யினரும் தடயங்களை சேகரித்தனர். ஆகவே சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கொண்ட நீதிபதிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை காவல்துறை யினர் வசம் ஒப்படைத்து விட்டு வருவாய் துறை அதிகாரிகள் மீண்டும் அவர்களிடம் பணிகளுக்கு திரும்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.