காதல் வயப்பட்ட மகள்: ‘கதை’யை முடித்துக் கொண்ட தந்தை..

காதல் வயப்பட்ட மகள்: ‘கதை’யை முடித்துக் கொண்ட தந்தை..

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரிக்கன்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பாலமுருகன்.

 ஊரடங்கின் போது இவரது 16 வயது மகள், கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது அந்த பெண், பக்கத்து வீட்டு இளைஞரின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். தகவல் அறிந்த பாலமுருகன், அங்கிருந்து தனது மகளை கருக்கன்குளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்.

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கண்டித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பாலமுருகன் மகள், சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டார்.மணப்பாறை போலீசில் இது குறித்து அவர் மனைவி புகார் அளித்துள்ளார்.

 -பா. பாரதி