உறங்கும் குழந்தையை இரண்டாக பிரித்துக் காட்டிய மேஜிக் தந்தை : வைரலாகும் வீடியோ

வாஷிங்டன்

னது குழந்தையை இரண்டாக பிரித்துக் காட்டி மேஜிக் செய்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஜஸ்டின் புலோம் என்பவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.   இவர் ஒரு மேஜிக் நிபுணராவார்.   இவர் பல விதமான மேஜிக் செய்து அதிசயம் நிகழ்த்தியவர்.  சமீபத்தில் இவர் செய்த ஒரு மேஜிக்கின் வீடியோ பதிவு மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது.

இவருடைய குழந்தை கட்டிலில் உறங்கும் போது அதன் வயிற்றின் மேல் இரு புத்தகங்களை வைத்துள்ளார்.   பிறகு அந்த புத்தகங்களை தனித்தனியாக நகர்த்தும் போது குழந்தை இரண்டாக பிளந்துள்ளது.    ஆனால் அந்தக் குழந்தை உடனடியாக எழுந்து சிரிக்கிறது.

இந்த வீடியோ பதிவில் மேற்கூறிய பதிவு உள்ளது.   இந்த வீடியோவை இதுவரை  பலரும் பகிர வைரலாகி வருகிறது.