சொந்த மகளை 22 வருடங்களாக பலாத்காரம் செய்து 8 குழந்தை பெற்ற தந்தை

இடது புறம் இருப்பவர் டொமிங்கோ

வில்லா பல்னேரியா, அர்ஜெண்டினா

ன் சொந்த மகளையே 22 வருடங்கள் பாலியல் அடிமையாக வைத்திருந்து 8 குழந்தைகள் பெற்ற நபரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அர்ஜைன்டினா நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அர்ஜென்டினா நாட்டின் வட பகுதியில் உள்ளது வில்லா பல்னேரியா என்ற நகரம். இங்கு வசிப்பவர் 57 வயதான டொமிங்கோ புலோசியோ. இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இத்தம்பதிக்கு இரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.

ஆண் குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவிட்ட டொமிங்கோ, பெண் குழந்தையை மட்டும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில், மகளுக்கு 12 வயது ஆன நிலையில் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இத்தொல்லை கடந்த 22 ஆண்டுகளாக நீடித்தது. இதற்கிடையே இவரால் இவரது மகளுக்கு 8 குழந்தைகள் பிறந்தன.

சமீபத்தில் அவரது மகள், தன் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு குழந்தையின் தந்தை குறித்த விபரங்கள் கேட்கப்பட்ட போது இந்த விவகாரம் வெளியானது.

இவர் பெற்றெடுத்த எட்டு குழந்தைகளுக்கும் டொமிங்கோதான் தந்தை என டி என் ஏ பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன.

இது குறித்து அவர், தனது11ம் வயதில் இருந்தே தந்தை பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும், தற்போது தன் தந்தையின் துன்புறுத்தல் குறித்து வெளியே தெரிவித்ததில் இருந்து, குடும்ப உறுப்பினர்களே தனக்கு கொலை கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இவருக்கப் பிறந்த 8 குழந்தைகளுக்கு டி.என்.ஏ. ஆய்வு செய்தபோது, அவரது தந்தைதான் குழந்தைகளுக்கும் தந்தை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்தது. உடனே டொமிங்கோ தலைமறைவாகிவிட்டார். 45 நாட்கள் வலைவீசித் தேடி அவரை காவல்துறை கைது செய்தது.

இது குறித்த வழக்கு விசாரணை முடிந்து டெமிங்கோவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.