Random image

மகள் வனிதாமீது தந்தை விஜயகுமார் காவல்நிலையத்தில் புகார்!

சென்னை:

னது வீட்டை காலி செய்ய மறுப்பதாக மகள் வனிதா மீது தந்தை விஜயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய குமார். இவருக்கு மதுரவாயல் பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவருடைய மகள் வனிதா குடியிருந்து வருகிறார். தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதார், தனது வீட்டை காலி செய்ய மறுப்பதாக மகள் வனிதா மீது மதுரவாயால் காவல் நிலையத்தில் நடிகர் விஜயகுமார் புகார் கூறி உள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவரும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், டி.வி. நடிகர் ஆகாசுக்கும் இடையே காதல் மலர்ந்து, அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன்மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  சில ஆண்டுகள் சேர்ந்து வாழந்த இவர்கள் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து  வனிதா ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை மணந்து ஒரு குழந்தையையும் பெற்றொடுத்தார். அந்த குழந்தைக்கு தற்போது 8 வயதாகிறது. பின்னர் அவரிடம் இருந்து 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்ற வனிதா,  நடிகை அல்போன்சாவின் சகோதரர், ராபர்ட் என்பவருடன் காதல் வயப்பட்டு மணந்தார்.  பின்னர் அவரையும் விட்டு பிரிந்து   அவருடைய தந்தை விஜயகுமாருக்கு சொந்தமான மதுரவாயிலில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜயகுமாருக்கும் அவருடை மகள் வனிதாவுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், தற்போது விஜயகுமார் வனிதா தன்னுடைய வீட்டில் இருந்து கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மகள் மீது தந்தை புகார் கொடுத்துள்ளது தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.