தூத்துக்குடி அனல் மின் நிலைய அலகுகளில் பழுது: மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் இரு அலகுகள் பழுதான காரணத்தால், 420 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 2வது மற்றும் 5வது அலகில் உள்ள கொதிகலனில் இன்று காலை திடீரென பழுது ஏற்பட்டது. இந்த திடீர் பழுது காரணமாக மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளது. இரு அலகுகளில் உள்ள பழுதை நீக்க 1 வார காலம் வரை ஆகும் என்பதால், மொத்தம் 420 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆங்காங்கே மின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தற்போது மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது அரசுக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.