டில்லி

நேற்று உலகின் பல இடங்களில் முகநூல் சேவை முடக்கம் அடைந்துள்ளது.

உலகெங்கும் ஃபேஸ்புக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முகநூல் சமூக வலைதளம் புகழ்பெற்று விளங்குகிறது.   இந்த முகநூலின் மற்றும் உள்ள சமூக வலை தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவையும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்த படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிரம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தளங்கள் செயலிழந்தன.   இதனால் உலகெங்கும் பலர் சிரமப்பட்டனர்.  பிறகு அது சரி செய்யப்பட்டது.   கடந்த மாத்ம் முகநூல் இது போலவே செயலிழந்ததால் இந்த வலை தளத்தின் பயனாளிகள் சுமார் 12 மணி நேரம் அவதியுற்றனர்,

நேற்று காலை மூன்றாம் முறையாக மீண்டும் முகநூல் முடங்கி உள்ளது.  இதனால் பலரும் தங்களுது தகவல்களை  அனுப்ப முடியாமலும் எவ்வித தகவலையும் காண முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.   இதே நிலை வாட்ஸ்அப் மற்றும் மெசெஞ்சரும் முடங்கின.

இது குறித்து முகநூல் செய்தி தொடர்பாளர், “இன்று காலை ஒரு சிலரால் நமது குடும்ப தளங்களில் இணையவும் செய்திகள் அனுப்ப அலலது பெறவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   அந்த தடங்கல் உடனடியாக சரி செய்யப்பட்டது.  பயனாளிகளுக்கு ஏற்பட்ட துயரத்துக்கு வருந்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.