கால்பந்து போட்டியின் தலைமை பயிற்சியாளராக மார்கோஸ் தேர்வு

ந்திய சூப்பர்லீக் கிளப் கால்பந்து போட்டியின் தலைமை பயிற்சியாளராக மார்கோஸ் பேக்வெட்டாவை நியமிக்கப்பட்டுள்ளார்.

2018 – ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மார்கோஸ் பயிற்சி அளிக்க உள்ளார். 30 வருடம் கால்பந்து போட்டியில் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவர் பெற்றவர் மார்கோஸ். இவரது தலைமையின் கீழ் விளையாடிய பிரேசில் கிளப்  2003 – ம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா போட்டிகளில் மூன்று முறை டைட்டிலை வென்றது  குறிப்பிடத்தக்கது.

இவரது இத்தனை வருட அனுபவத்தில் 22 முறை கோப்பைகளையும், உலக கோப்பையில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பிரேசில் வென்றுள்ளது. மார்கோஸின் தொடர் வெற்றியை அடுத்து லிபியா தலைமை  பயிற்சியாளர் பதவியை அளித்து சிறப்பித்தது.

இந்நிலையில் புனே கால்பந்தாட்ட கிளபின் சி.இ.ஓ கௌரவ் மொட்வெல், மார்கோஸ் பேக்வெட்டாவை  கெளரவித்து இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வலியுறுத்தினார். இது குறித்து மார்கோஸ் ‘ புனே கால்பந்தாட்ட கிளப் இளம் வீரர்கள் சாதிப்பதற்கு மிக பெரிய சாத்தியம் இருப்பதாகவும், திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்றிருப்பதை கண்டு தாம் ஆச்சரியப்படுவதாக’   கருத்து தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி