புரட்டி எடுக்கும் படுகொலை பயம்.. தனக்கே சிலை வைத்த எம்எல்ஏ..

மே.வங்க மாநிலம் கோசபா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், ஜெயந்தா நஸ்கர்.திரினாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அண்மைக்காலமாக அவருக்கு உயிர் பயம் இருந்து வருகிறது.

அலிபோர் சிறையில் இருந்து தப்பி சென்ற நான்கு கிரிமினல் பேர்வழிகள் மீண்டும் போலீசில் பிடிபட்டனர்.
‘’ எம்.எல்.ஏ. ஜெயந்தாவை கொல்லும் பொறுப்பு எங்களுக்கு உள்ளூர் அரசியல் வாதிகளால் கொடுக்கப்பட்டுள்ளது.அதற்காகவே தப்பி சென்றோம்’’என்று அவர்கள் வாக்குமூலம் கொடுக்க- ஆடிப்போனார், ஜெயந்தா.

அவருக்கு இப்போது 11 போலீசாரை கொண்ட ஒய்-ரக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஜெயந்தாவுக்கு உயிர் பயம் போகவில்லை.

தனது மூன்று சிலைகளை அண்மையில் பிரபல சிற்பியை கொண்டு வடிவமைத்து, தனது வீட்டின் கீழ் தளத்தில் திறந்து வைத்துள்ளார்.

அதில் இரண்டு முழு உருவச்சிலைகள். ஒன்று-மார்பளவுச்சிலை.

‘’எனது எதிரிகளால் நான் கொல்லப்படுவேன் என்ற பயம் உள்ளது. நான் செத்த பிறகு என்னை மக்கள் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த சிலைகளை திறந்து வைத்துள்ளேன்’’ என்கிறார், எம்.எல்.ஏ. ஜெயந்தா.

-லட்சுமி பிரியா