இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்! பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுக்கப்பட்டார் என பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். இது அந்நாட்டில்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு (2019)   காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தைக்கொண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள்  தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.  இதற்கு, இந்திய ராணுவம்  பதிலடி கொடுத்தது. கடந்த  2019 பிப்ரவரியில், இந்திய விமானப் படை விமானங்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அதிரடி  தாக்குதல் நடத்தி  பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவிசி அழித்தன. இந்த தாக்குதலின்போது,  மிக் – 21 ரக விமானத்தில் சென்ற அபிநந்தன், பாகிஸ்தான், விமானத்தை சுட்டு வீழ்த்திய நிலையில், அவரது விமானமும் தாக்கப்பட்டது. இதன் காரணமாக,  அவரது விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது. அபிநந்தனும், அங்கு தரையிறங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த  பாகிஸ்தான் , ராணுவத்தினர் அபிநந்தனை கைது செய்தனர்.  இது தொடர்பான வீடியோ வைரலானது.  அபிநந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என இந்தியர அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில் உலக நாடுகளும் அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன. இதன் காரணமாக  60 மணி நேரத்துக்குப்பின் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் நாட்டின் முஸ்லீம் கட்சி கட்சி தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் என்பவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். அபிநந்தனை கைது செய்த பின்,  பாகிஸ்தான் அரச உடனே அவசர கூட்டத்தை  கூட்டியது. ஆனால், இக்கூட்டத்திற்கு வர இம்ரான் கான் மறுத்துவிட்டார். வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மஹ்மூத் குரேஷி  தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது,  நாட்டின்மீது இந்தியாவின் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், அபிநந்தனை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும், இல்லையெனில், இன்று இரவு (அன்றைய தினம்) 9 மணிக்கு, பாகிஸ்தானை இந்தியா தாக்கும் என ப மஹ்மூத் குரேஷி கூறினார், அப்போது, அப்போது அங்கிருந்த  ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு வியர்த்துக் கொட்டியது; அவரது கால்கள் நடுங்கியதை நான் கண்டேன்.  என்று தெரிவித்து உள்ளார்.
பாக்.,முஸ்லீம் கட்சி கட்சி தலைவர் தெரிவித்துள்ள இந்த தகவ்ல பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் (37) என்பது குறிப்பிடத்தக்கது.