பயம்: அரசு வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் நீக்கம்!

சென்னை,

டிகர் கமலஹாசன் ஊழல் குறித்த தகவல்களை ஆன்லைலின் அனுப்புங்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தகவல்கள் உடடினயாக அகற்றப்பட்டு உள்ளது.

இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமலுக்கு,  தமிழக அமைச்சர்கள் பயந்துபோய் உள்ளனர் என்பதையே இது  காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக அரசின்  ஊழல் புகார்களை அரசின் இணையதளத்தில் உள்ள அமைச்சர்களின் முகவரிக்கு (http://www.tn.gov.in/ministerslist) அனுப்பி வைக்கும்படி தனது ரசிகர்க ளுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார்  உள்ளிட்ட அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இணையதளம் உள்ளது.

கமலின் வேண்டுகோளை ஏற்று அரசு இணையதளங்களுக்கு ஊழல் குறித்த புகார்களை அனுப்ப முயன்ற பொதுமக்கள், அரசு இணையதளத்தில் எந்தவித விவரம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கமலின் அறிக்கைக்கு முந்தைய நாள் வரை அனைத்து விவரங்களும் இருந்த நிலையில், தற்போது முதல்வர் உள்பட அமைச்சர்களின் விவரங்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதன்மூலம், வெளிப்படையாக கமல் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று,  தமிழக அமைச்சர்கள் கமலுக்கு பயந்துபோய், தனது முகவரிகளை நீக்கி உள்ளதாக  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.