உலக தாய்மொழி தினம் இன்று…. தமிழர்களாகிய நாம் தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்….

லகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர் களாகிய நாமும், தமிழில் பேசி, தமிழ் மொழியை வளர்க்க இன்றைய தினத்தில் உறுதிகொள்வோம்.

தாய் மொழியைக் காப்பாதற்காக கடந்த 1952ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத் தில் உயிர் நீத்த வங்க தேச மொழியுரிமைப் போராளிகளின் நினைவாகவும், அழிந்து வரும் மொழிகளை  காப்பாற்றவும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியை  உலக தாய் மொழி தினமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2000ம் ஆண்டு முதல்  உலகம் முழுவதிலும், உலக தாய்மொழி தினம் கொண் டாடப்பட்டு வருகிறது.

மனிதர்கள் தாம் நினைப்பவற்றை அடுத்தவர்களுக்கு தெரிவிப்பதற்காக தோன்றி யதே மொழி. மனிதர்களின் உரையாடல்களுக்கு மட்டும் பயன்பட்டு வந்த மொழி நாளடைவில், மனிதர்களின் அடையாளங்களின் ஒன்றாக மாறியது. அந்த வகை யில் மனிதர்கள் தாம் பேசும் மொழியை இன அடையாளமாக கருதி வருகின்ற னர்.

உலக மொழிகள் குறித்து ஆய்வு செய்து வரும் யுனெஸ்கோ நிறுவனம்,  உலகம் முழுவதும் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருவதாக தெரி வித்து உள்ளது. ஆனால், தற்போது பல மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாக வும், மாதத்திற்கு இரு மொழிகள் மற்றும் அதன் கலாச்சாரம் அழிந்து வருவதாக வும் அதிர்ச்சி ஆய்வுகளை வெளியிட்டு உள்ளது.

மேலும், உலக மக்களில் 40 சதவிதம் பேர் தங்களின் தாய்மொழியில் கல்வி கற்க வில்லை என்றும் தெரிவித்து உள்ளது. உலக அளவில் அழியும் என்று கூறப்படும் 4000 மொழிகளில் 10% மொழிகள் இந்தியாவில் தான் பேசப்படுவதாகவும், மொழிகள் அழியாமல் காக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் ஏராளமான மொழிகள் பேசப்பட்டு வரும் நிலையில், கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாடு முழுவதும் 121 மொழிகள் பேசப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ மாக 22 மொழிகள் என்றே அரசியல் சாசனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, குஜராத்தி, இந்தி, காஷ்மீரி, கன்னடம், கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிபூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. அத்துடன் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 6 மொழி களுக்கு செம்மொழி அந்தஸ்தும் வழங்கப்பட்டு உள்ளது.

தாய் மொழி ஒருவருக்கு கண் போன்றது, பிற மொழி கண்ணாடி போன்றது.  தாய் மொழி பேசாதவனும் தந்தை வழி கேளாதவனும் வாழ்வில் வளம் பெற்றதாக வரலாறே இல்லை என்பது சான்றோர்களின் வாக்கு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதற்கு பெரும் படை தேவையில்லை. அவர்களின் தாய் மொழியை அழித்தாலே போதும் என்று சொல்லப்படுவது உண்டு. அவ்வளவு சக்தி மிகுந்தது தாய்மொழி.

இன்றைய நாளில்  ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழியை பேணி காக்க சபதம் மேற்கொள்வோம். மனிதனுக்கு  தாய்மொழி பற்று  அவசியம்… ஆனால், அது ஒருபோதும் மொழி வெறியாக மாறக்கூடாது. தாய் மொழி காப்பாற்றுவோம்..