குக்கிராமங்களுக்கு செல்ல புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ஆந்திர அரசு தொலைதூர பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி உள்ளது. பெரும்பாலான குக் கிராமங்களில் மருத்துவ சேவை பெறுவதற்கு மக்கள் தவித்து வந்ததால் அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
ambulances
பழங்குடியின மக்களுக்கு மருத்துவ வசதியினை அளிப்பதன் மூலம் சிறந்த முடிவுகளை பெற ஆந்திர அரசு முயன்று வருகிறது. அதன் ஒருபகுதியாக “ஃபீடர் ஆம்புலன்ஸ்” என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட பழங்குடியின மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து 108 அல்லது அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டால் ஃபீடர் ஆம்புலன்ஸ் அல்லது பைக் ஆம்புலன்ஸ் சேவையை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தேவைப்படும் நேரத்தை குறைக்கும் விதமாக ஃபீடர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஆந்திரா முழுவதும் தற்போது 122 ஃபீடர் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஃபீடர் ஆம்புலன்சில் முதலுதவி பெட்டி, மருந்துகள், அறுவை சிகிச்சை தேவைப்படும் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. சாதரண ஆம்புலன்ஸ் நுழைய முடியாத கிராமங்களில் இந்த பைக் ஆம்புலன்ஸ் சென்று சேவையை வழங்கி வருகிறது.
ambula
சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவ சேவைகள் தாமதப்படுத்துவதை தடுக்கும் வகையில் பைக் ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. வழக்கமான ஆம்புலன்ஸ் சேவையை விட இந்த பீடர் ஆம்புலன்ஸ் வேகமாக செயல்படுவதாக ஆதிவாசி இனமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவம் மற்றும் உடல்நலத்துறை அதிகாரிகள் கூறுகையில் “ சாதாரண ஆம்புலன்சில் இருப்பது போன்ற அனைத்து உபகரணங்களும் ஃபீடர் ஆம்புலன்சில் இருக்கின்றன. அதனுடன் ஒரு ஸ்டெச்சரும் இணைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். இந்த ஆம்புலன்ஸ் குடிசைப்பகுதிகளுக்கும் சென்று சேவை செய்வதால் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.