சிபிஐ அதிகாரி என சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன் : முன்னாள் இயக்குனர் ரகோத்தமன்

சென்னை

சிபிஐ அமைப்பில் நான் பணியாற்றினேன் என சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன் என முன்னாள் சிபிஐ இயக்குனர் ரகோத்தமன் கூறி உள்ளார்.

சிபிஐ அமைப்பில் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மத்திய அரசு தலையிட்டு இருவரையும் விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. அத்துடன் மத்திய அரசு இளைய அதிகாரி ஒருவரை பதவி உயர்வு அளித்து இயக்குனராக அமர்த்தியது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் சிபிஐ இயக்குனர் ரபேல் விமான ஊழல் குறித்து விசாரித்ததால் அவரை மத்திய அரசு மாற்றியதாக கூறின. அத்துடன் ஆந்திரப் பிரதேச நிதி அமைச்சர் ராமகிருஷ்ணுடு பிரதமர் மோடியை சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கியை விழுங்கிய பாம்பு என விமர்சித்தார்.

சென்னை ராயபுரத்தில் சிபிஐ அமைப்பு விவகாரங்கள் குறித்து ஒரு கருத்தரங்கம் நடந்தது. அந்த கருத்தரங்கில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சிபிஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர். அந்த கருத்தரங்கில் சிபிஐ முன்னாள் இயக்குனர் ரகோத்தமன் உரை ஆற்றினார்.

அதன் பிறகு ரகோத்தமன் செய்தியாளர்களிடம், “நான் மாநில காவல் துறையில் பணி புரிந்ததில்லை. நேரடியாக சிபிஐ அமைப்பில் அதிகாரியாக 36 ஆண்டுகள் பணி புரிந்தேன். நான் ஓய்வு பெறும் போது நாட்டின் தலை சிரந்த அமைப்புக்களில் ஒன்றாக இருந்த சிபிஐ தற்போது இப்படி சின்னாபின்னம் ஆக்கப் பட்டுள்ள்து. இதனால் நான் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி என வெளியே சொல்ல எனக்கு வெட்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.