தனியார் பள்ளிகள் : கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க அரசு உத்தரவு

.

சென்னை

னியார் பள்ளிகளில் கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் எங்கும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.  இன்னும் சில தினங்களில் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சர் செங்கோட்டையனும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் இன்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிந்த பின் அமைச்சர் செய்தியாளர்களிடம், “அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.   ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வரும் ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப் பட உள்ளன.   அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான ஆலோசனைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.