7 அடியில் பிரமாண்ட அஜீத் நாள்காட்டி!

ஜீத் ரசிகர்கள் இந்த புத்தாண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள். ஏழு  அடி உயரத்தில் பிரமாண்டமாக அஜீத் காலண்டரை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கடந்த பல வருடங்களாகவே அஜீத் ரசிகர்கள் பலர், விதவிதமான நாள்காட்டியை உருவாக்குவது வழக்கம்.   இந்தாண்டு 7 அடி உயரத்தில் அஜீத் உருவத்துடன் கூடிய காலண்டரை வடிவமைத்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள். மரத்தால் காலண்டரை உருவாக்கி அதில் அஜீத் உருவத்தை பொருத்தி இருக்கிறார்கள்.  இதே போல சமீபத்தில் அஜீத்தின் 25 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்து அஜீத் ரசிகர்கள் அதிரவைத்தார்கள். அதே போல அஜீத்தின் மகள் பிறந்தநாளை ஒட்டி, அவரை ஜெயலலிதா  போல சித்தரித்து போஸ்டர் அடித்தனர் மதுரை ரசிகர்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் ஏழு அடி உயர் காலெண்டரை உருவாக்கி இருக்கிறார்கள். இதில், தன்னம்பிக்கை தல குரூப்ஸ், திருச்சி என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும், ‘’எண்ணம் போல் வாழ்க்கை’’ ‘’வாழு, வாழவிடு’’ என்ற வாசகங்களையும் அச்சிட்டுள்ளார்கள்.