கொடூரம்: பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு!

ஆசிட் வீசப்பட்ட பெண் காவலர்

வேலூர்,

திருப்பத்தூரில் பணி முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த பெண் போலீஸ் மீது ஆசிட் வீசப்பட்டது.  இந்த கொடூரமான சம்பவம் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் லாவண்யா, திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணி  புரிந்து வரும் இவர், நேற்றிரவு பணி முடிந்து காவல் நிலையத்திலிருந்து வீட்டுக்கு தனது தனது இருசக்கர வாகனத்தில்செ ன்று கொண்டிருந்தார்.

அவரை தொடர்ந்து மறறொரு வண்டியில் வந்த இளைஞர்கள்  இருவர்,  பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு வந்த ஆசிட்டை லாவண்யா மீது வீசிவிட்டு தப்பி சென்றனர்.

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான லாவண்யா வண்டியிலிருந்து இறங்கி வலியால் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள்  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் உடடினயாக அவரை மீட்டு  அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனை யில் அவரை சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண் போலீஸ் மீததே ஆசிட் வீசிய சம்பவம் திருப்பத்துர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர்  ஆசிட் வீசிய மர்ம நபர்கள் இருவரையும்  சல்லடைபோட்டு தேடி வருவதாக கூறப்படுகிறது.