மெக்கா மசூதியில் முதன்முதலாக பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் …

ரியாத்: சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஹஜ் பயணத்துக்கு அனுமிதி வழங்கப்பங்டடுள்ள நிலையில், மெக்கா கிராண்ட் மசூதியில் முதல் முறையாக  பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) ஹஜ் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தொற்று பரவல் குறையத் தொடங்கியதும், கொரோனா நெறிமுறைகளுடன் உம்ரா யாத்ரை வர அனுமதி வழங்கி வந்தது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், புதிய விதிமுறைகளுடன் இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு சவூதி அரசு அனுமதி வழங்கி வருகிறது.

அதன்படி,   ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்கள்கொரோனா தடுப்புக்கான இரண்டாவது ஊசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சான்றிதழ் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கும், கைக்குழந்தைகளுக்கும் அனுமதி கிடையாது என்றும்,  சவூதி அரேபிய வருபவர்கள்  அங்கு இறங்கியவுடன் 72 மணி நேரம் (3 நாள்) தனிமைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அத்துடன் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து, உம்ரா யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக மெக்கா கிராண்ட் மசூதியில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பல ஆண்டுகளாக சவூதி உள்ள இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு எந்தவித உரிமையும் கொடுக்கப்படாமல் அடிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2005ம் ஆண்டுகளுக்கு பிறகே பெண்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் கல்வி உரிமை, பின்னர் அரசியல் உள்பட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு காவல்துறையிலும் பெண்கள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.