ஐஜி மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்ற விசாகா கமிட்டி பரிந்துரை

சென்னை:

மிழக காவல்துறை லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மீது அவரின் கீழ் பணியாற்றி வந்த பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகாரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்க பரிந்துரைத்துள்ளது விசாகா கமிட்டி.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்து  வரும் நிலையில், காவல் துறையிலும் பெண் காவலர்கள்மீது மீது பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள லஞ்சஒழிப்புத்துறை ஐஜி மீது, அவருடன் பணியாற்றி வரும் பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான 5 நபர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.அத்துடன் புகார் கூறிய பெண் எஸ்.பி.யுடம் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த கமிட்டியில் உச்சநீதி மன்ற வழிகாட்டுதல் படி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசோ,  ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சரஸ்வதியை நியமித்தது. இது சர்ச்சையை எற்படுத்தியது. அதைத் தொடர்ந்து விசாகா குழுவை  மாற்றியமைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஐஜியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், விசாகா குழுவோ, தங்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று கைவிரித்துவிட்டது. தொடர்ந்து, பாலியல் புகார் குறித்து ஐஜி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரணை நடத்த பரிந்துரை செய்து உள்ளது.