துனிசியா : பெண் தீவிரவாதியின் தற்கொலை தாக்குதல்

--

டூனிஸ்

துனியா நாட்டின் தலைநகரில் பெண் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்று துனிசியா.    இந்நாட்டின் தலைநகர் டூனில்.   இந்த நாட்டில் வெளிநாட்டுப் பயணிகளை குறிவைத்து அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வந்தன.   ஒரு சில நாடுகள் துனிசியா நாட்டுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் குடிமக்களை எச்சரித்து இருந்தன.    பிறகு நிலைமை சீரானதால் சென்ற ஆண்டு அந்த எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.

டுனிஸ் நகரில் ஒரு வணிக வளாகம் உள்ளது.   அந்த வளாகத்தில் வெளிநாட்டினர் அதிகமாக தங்கும் விடுதி அமைந்துள்ளது.   அத்துடன் அங்கு துனிசியா அமைச்சக அலுவலகங்கள், பிரான்ஸ் நாட்டு தூதரகம் ஆக்யவை அமைந்துள்ளது.   இதனால் அந்த வளாகம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் இருக்கும்.

நேர்று கூட்டம் மிகவும் அதிகமாக இருந்த சமயத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இடையில் நுழைந்துள்ளார்.  அவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்.   அதனால் அவர் உடல் சிதறி உயிர் இழந்தார்.    அத்துடன் சுமார் 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பால் காயம் அடைந்தோர் உடல்நில கவலக்கிடமாக  உள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்..     இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை  எந்த ஒரு இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.    அமைதி திரும்பியதாக கருதப்பட்ட துனிசியாவில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கி உள்ளதால் பல உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.