‘மிஸ் இந்தியா அழகி’ படத்தை வென்றார் தமிழக கல்லூரி மாணவி அனு

மும்பை :

மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தை சேர்ந்த  சென்னை கல்லூரி மாணவி அனுகிரீத்தி (anukreethy ) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான  பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில இந்தியா முழுவதும் இருந்து  29 மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான  இளம்பெண்கள்  பங்கேற்றனர்.

பல்வேறு கட்ட போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் தகுதி பெற்றவர்களுக்னான இறுதிப்போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது.  வண்ணமயமான இறுதிச் சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சென்னை லயோலா கல்லூரி மாணவி அனுகிரீத்தி  முதலிடத்தை பிடித்து சாதனை பிடித்துள்ளார். அவருக்கு மிஸ் இந்தியா 2018 பட்டம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  அனுகிரீத்தி க்கு கடந்த ஆண்டு அழகி  மனுஷி சில்லர் மகுடம் சூட்டினார்.

அரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி 2வது இடத்தையும்,  ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ்  மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்த போட்டியில்,  கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட மனுஷி சில்லர், பிரபல இந்தி  நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீட்சித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

19 வயது கல்லூரி மாணவியான அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் பயின்று வருகிறார்.