பெண்ணியவாதிகளே.. சேனலை மிரட்டுவதை நிறுத்துங்கள்!: பெண் பதிவரின் காட்டம்

“நீயா நானா கோபிநாத் – பதிவர் சரண்யா”

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” நிகழ்ச்சியில் இன்று, “அழகில் சிறந்தவர்கள், கேரள பெண்களா, தமிழக பெண்களா” என்ற தலைப்பில் விவாதம் நடக்க இருந்தது.  இது சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு பெண்ணுரிமை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பெண் பதிவரான சரண்யா சச்சிதானந்தம் (saranya satchidanandam)  அவர்கள், “பெண்ணியவாதிகளே, சேனலை மிரட்டுவதை நிறுத்துங்கள்” என்ற கருத்துபட முகநூலில் பதிவிட்டுள்ளார்.

பதிவு

அவரது பதிவு:

சில வருடங்கள் முன்பு ‘யாருடைய டிரஸ்ஸிங் நல்லாருக்கு. . North Indians or South Indians? ” என்ற தலைப்பில் இதே நீயா நானாவில், வடநாட்டு மற்றும் தென்னாட்டு பெண்களின் உடையலங்காரத்தை அக்கு அக்காக பிரித்தார்கள்.

ஆண், பெண் இருவரும். . . அதிலும் ஒருவர் “எங்க வீட்லலாம் (North )புடவை மடிப்பு சரியா வைக்காட்டி வாசலைத் தாண்டி கூட வர மாட்டார்ள். . இங்கேயோ நீயா நானாவுக்கு வரும்போது கூட புடவை கட்டத் தெரியலை ” னு ஓப்பனாவே சாடினார்.

. கேரளம் அழகா, தமிழ் அழகா என்பது கூட பொதுவான டாப்பிக். . டிரஸ்ஸிங் எல்லாம் விமர்சனத்துக்கு உட்படுத்துவது பக்கா கேவலமான உடையரசியல். .

அப்பல்லாம் மௌனியாகிவிட்டு இப்போ ‘யார் அழகு ‘ னு ஒரு சின்ன ப்ரோகிராம் வருவதைக் கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியலைனா அது Pseudo Feminism பெண்ணிய வாதிகளே.

Hashtag லாம் போட்டு சேனலை மிரட்டுவதை விட, தத்தமது வீட்டில் உங்கள் அண்ணன் மனைவி, தம்பி மனைவி, சகோதர்களின் காதலிகள், வீட்டுக்கு வரும் மருமகள்கள், சக கல்லூரி பெண்களையெல்லாம் “கண்ணு சரியில்லை . . மூக்கு சரியில்லை “னு நொட்டை சொல்லும் குறை சொல்லி பெண்களை திருத்த முயலுங்கள்.

Objectification பெண்களிடமிருந்தும் தொடங்குகிறது. .” இவ்வாறு சரண்யா பதிவிட்டுள்ளார்.