அந்நிய செலாவணி வழக்கு: நேரில் ஆஜராக டிடிவிக்கு நீதிபதி கண்டிப்பு!

சென்னை,

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஆர்.கே.நகர் தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

ஆனால், நீதிபதி வளர்மதியோ, டி.டி.வி.தினகரன் வரும்  19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் விசாரணையின்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டார்.

டிடிவி தினகரன்மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை 1996ம் ஆண்டு பதிவுசெய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.

இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.

இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் ஆஜராகாததற்கு கண்டனம் தெரிவிதித்த நீதிபதி   நீதிபதி, வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும்,  19-ம் தேதி ஒரு வழக்கும், 20-ம் தேதி ஒரு வழக்கும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.