சென்னை:

ன்னிய செலாவணி வழக்கில் இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதி மன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார்.

இன்றைய விசாரணையின்போது,  மத்திய அமலாக்காத்துறை அவகாசம் கேட்டதைதொடர்ந்து, வரும் 28ந்தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அன்று  அமலாக்கத்துறை சாட்சிகளிடம் ஆகஸ்ட் 28-ல் டிடிவி தினகரன் தரப்பு குறுக்கு விசாரணை செய்யலாம் என்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும்,  டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை மெத்தனம் காட்டுவதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், டிடிவி தினகரன் இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது, சாட்சிகளை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். ஆனால் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதை தொடர்ந்து வழக்கு 28ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோல், சசிகலா கணவர் நடராஜன் மீதான அந்நிய செலாவணி வழக்கில் அமலாக்கத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

நடராஜன், பாஸ்கரன், மீதான வழக்கில் அமலாக்கத்துறை சரியாக செயல்படவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளார்.

வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்துவதாக நீதிபதி மலர்மதி குற்றம் சாட்டியுள்ளார்.