சென்னை:

பெரா வழக்கில் ஆஜராகாத டிடிவி தினகரனுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துகிறார் டிடிவி தினகரன் என்று நீதிபதி கூறியுள்ளார். இன்று ஆஜராகாததை அடுத்து டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய தினகரன் தரப்புக்கு அவகாசம் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996 ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ஜெயா டிவிக்கு  தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கியதி மொசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. அந்நிய செலாவணி குறித்து,  ஐந்து வழக்குகள் தினகரன் மீது நிலுவையில் உள்ளது.

நேற்றைய விசாரணையின்போது, சசிகலா வீடியோ காணப்ரன்சிங் மூலமும், பாஸ்கரன் நேரிலும் ஆஜராகினர். அவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து சசிகலா மீதான மறு விசாரணையை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது,  வழக்கில் ஆஜராகாத டிடிவி தினகரனுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துகிறார் டிடிவி தினகரன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

இந்நிலையில், தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய ஜூன் 29 ஆம் வரை கால அவகாசம் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.