பெரா வழக்கு: கோர்ட்டில் ஆஜராக டி.டி.வி.தினகரன் புறப்பட்டார்!

சென்னை,

ந்நிய செலாவணி மோசடி வழக்கில் இன்று ( ஜூன் 8ந்தேதி) விசாரணைக்கு டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து எழும்பூர்  கோர்ட்டில் ஆஜராக டிடிவி தினகரன் புறப்பட்டார்.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் புறப்பட்டார் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது டிடிவி தினகரன் ஆஜர் ஆகவில்லை. விசாரணையின்போது டிடிவி தினகரன் ஆஜர் ஆகவில்லை. அவர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்றைய (8ந்தேதி) விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து ஜாமினில் வெளிவந்துள்ள தினகரன் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் ஆஜராக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.