டில்லி,

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்குக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கை எதிர் கொள்ளும்படி டிடிவிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெரா வழக்கில் விசாரணையை தினகரன் எதிர்க்கொள்ள வேண்டும் எனக்கூறி வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

20ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது சூடுபிடித்து, எழும்பூர் பொருளாதா கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வரும அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தது. அப்போது,  வழக்குகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் விசாரணையை தினகரன் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா, டிடிவி தினகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது ஜெயா டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக  அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.

20ஆண்டுகளுக்கும் மேலா கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு, தற்போதுதான் உயிர்பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கை மீண்டும்  இழுத்தடிக்கும் நோக்கில் டிடிவி தினகரன், உச்ச நீதி மன்றத்தில், தம் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகளுக்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்கு களுக்குத் தடை விதிக்க அதிரடியாக மறுத்துவிட்டது. மேலும்,  பெரா வழக்கில் விசாரணையை தினகரன் எதிர்க்கொள்ள வேண்டும் எனக்கூறி வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, டிடிவிக்கு பொருளாதார கோர்ட்டு நீதிபதி விசாரணைக்கு ஒழுங்காக ஆஜராகுமாறு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில, தற்போது சுப்ரீம் கோர்ட்டும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியிருப்ப தால், விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராக வேண்டிய சூழ்நிலை டிடிவிக்கு  ஏற்பட்டுள்ளது.