Random image

ஸ்பெயின் கால்பந்து அணி : பழைய பயிற்சியாளர் அவுட் புதியவர் இன்

மாஸ்கோ

ஸ்பெயின் அணிக்கு பழைய பயிற்சியாளர் ஜுலன் நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளராக ஃபெர்னாண்டோ ஹெய்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2018 விரைவில் நடைபெற உள்ளது.  இதில் நாளை நடைபெற உள்ள போட்டியில் ஸ்பெயின் அணியும் போர்ச்சுகல் அணியும் மோத உள்ளன.   ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜூலண் நீக்கப்படதால்  அணி பயிற்சியாளர் இன்றி இருந்தது.

நேற்று ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக ஃபெர்னாண்டோ ஹெய்ரோ அறிவிக்கப்பட்டுள்ளார்.   அந்த அணியின் தற்காலிக பயிற்சியாளராக இவர் அணியுடன் மாஸ்கோவில் ஏற்கனவே தங்கி இருந்தார்.    இவர் பயிற்சியாளர் ஆவது இதுவே முதல் முறை ஆகும்.

ஹெய்ரோ தாம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து, “நான் என்னை தேர்ந்தெடுத்த போது மாட்டேன் என சொல்லி இருந்தால் என்னை நானே மன்னிக்க மாட்டேன்.   நமக்கு முன்பு இப்போது ஒரு மாபெரும் வாய்ப்பு காத்துக் கொண்டு உள்ளது.   நாம் அதை பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.   ஸ்பெயின் அணியின் வெற்றி ஒன்றே நமது குறிக்கோள்” என தெரிவித்துள்ளார்.