ஃபிபா உலக கோப்பை: வெற்றிக்கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த வீரர்

அர்ஜெண்டினா வெற்றிக் கொண்டாட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டிகளில் மெஸ்ஸின் அர்ஜெண்டினா அணியும், நைஜீரியாவும் மோதின. ஏற்கெனவே விளையாடிய அர்ஜெண்டினா அணி ஒரு போட்டியில் வெற்றிப்பெற்ற நிலையில் மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது. இதனால் நைஜீரியாவுடனான போட்டியில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அர்ஜெண்டினா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் எனற கட்டாயம் இருந்தது. இந்நிலையில் அர்ஜெண்டினா- நைஜீரியா போட்டி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
diego-maradon
பல்வேறு எதிர்ப்பார்ப்புக்கிடையே தொடங்கப்பட்ட ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்தன. அதன் பிறகு நீண்ட நேரம் போராடிய நிலையில் எதிர்பாராத விதமாக அர்ஜெண்டினா அணியின் ராஜோ ஒரு கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற புள்ளிகளில் நைஜீரியாவை வென்றது.

அர்ஜெண்டினா வெற்றியை பார்த்து துள்ளி குதித்த முன்னாள் வீரர் மாரடோனா திடீரென நிலைக்குலைந்து விழுந்தார். அதனை தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மாரடோனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த அழுத்தமும் மற்றும் லேசான இருதய கோளாறும் ஏற்பட்டதாக தெரிவித்தனர். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு மாரடோனா மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக அர்ஜெண்டினாவில் உள்ள உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது