டில்லி,
றைந்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதி நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய குழுவினர் இன்று கியூபா செல்கின்றனர்.
பிடல் காஸ்ட்ரோவின் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய குழு  கியூபா நாட்டிற்கு செல்கிறது.

அமெரிக்காவுக்கு மிக அருகில் அமைந்த தீவு நாடான கியூபாவின் பிரதமராகவும், அதிபராகவும் சுமார் 50 ஆண்டு காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. கம்யூனிச கொள்கைகளில் பிடிப்பு கொண்ட அவர் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார். உடல்நல குறைவு காரணமாக 2008–ல் ஆட்சியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ  25-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் பொதுமக்கள்அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோவின் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய குழு கியூபா நாட்டிற்கு செல்ல உள்ளது.

பொதுவாக நாட்டின் தலைமை மந்திரியோ அல்லது வெளியுறவுத்துறை மந்திரியோதான் இதுபோன்ற நிகழ்ச்சி களுக்கு செல்வது வழக்கம். ஆனால்,  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் உள்ளதால்,  அவருக்கு மாற்றாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கியூபா செல்ல உள்ளார்.
ராஜ்நாத் சிங்குடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் டில்லியில் இருந்து ஹவானா நகருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.