மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்டிரோவின் மூத்த மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மக்ன் டியாஸ் பலர்ட் (Diaz-Balart) தற்கொல செய்துகொண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.

பிடல் காஸ்ட்ரோவின் முதல்மனைவி மிர்டாஸ் டியாஸ் பலர்ட். இவருக்கும் பிடல் காஸ்டிரோவுக்கும் பிறந்தவர் டியாஸ் பலர்ட். தற்போது 68 வயதாகும் இவர் பிடலிட்டோ (“Fidelito”)   என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ள இவரை லிட்டில் பிடல் என்றும் அழைப்பது உண்டு. பிடல் காஸ்டிரோ இறந்தததில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர்  தற்கொலை செய்துகொண்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்டிரோ கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது 90 வயதில் காலமானார். அதைத் தொடர்ந்து கியூபா அதிபராக அவரது பிரதமர் ரால் பதவியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.