ஃபிஃபா 2018: பனாமா அணியை வீழ்த்தியது பெல்ஜியம்

மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஜி பிரிவில் உள்ள பெல்ஜியம்-பனாமா அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதி வரை யாரும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டம் தொடங்கிய 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-:0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு 69, 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தார். இதனால் 3:-0 என பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது. பனாமா அணியினர் இறுதி வரை கோல் அடிக்கவில்லை. இதனால் பெல்ஜியம் அணி 3:-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.