உலகக் கோப்பை கால்பந்து 2018 : செர்பியாவை பிரேசில் வீழ்த்தியது.

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் செர்பிய அணியை பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் நேற்று நடந்த போட்டிகளில் ஒன்றில் பிரேசில் அணியும் செர்பியா அணியும் மோதின.  தற்போதைய நிலையில்  பிரேசில் அணிக்கு மேலும் முன்னேற வெற்றி அல்லது டிரா தேவையாக இருந்தது.   செர்பிய அணியும் தனது வெற்றியை எதிர் நோக்கி இருந்தது

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதி வந்தன.    ஆட்டம் தொடங்கி 36 ஆம் நிமிடம் பவுலினோ தனது முதல் கோலை அடித்து பிரேசில் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.   இதனால் செர்பிய அணி மிகவும் கடுமையாக  போராடியது.    ஆயினும் முதல் பாதியில் அதன் பிறகு கோல் அடிக்காததால் பிரேசில் அணி 1 கோலுடன் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் துவக்கத்தில் இருந்தே ரசிகர்களுக்கு மிகவும் விருவிருப்பாக இருந்தது.  செர்பியா அணி மேற்கொண்டு பிரேசிலை கோல் அடிக்க விடாமல் தடுத்த போதிலும் அந்த அணி ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தது.  ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் தியாகோ சில்வா அணியின் இரண்டாவது கோல் அடித்ததில் அணி மேலும் முன்னேறியது.

அதன் பிறகு இரு அணிகளும் கடுமையாக முயன்றும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.   பிரேசில் அணி செர்பிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.