ஃபிஃபா 2018: கோஸ்டாரிகாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

மாஸ்கோ:

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணியும், கோஸ்டாரிகா அணியும் மோதின.

இதில் பிரேசில் அணி 2:-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர்கள் நெய்மர், கவுடினோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.