உலகக் கோப்பை கால்பந்து 2018 : பிரேசில் – சுவிட்சர்லாந்து போட்டி டிரா

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018 பிரேசிலும் சுவிட்சர்லாந்தும் மோதிய லீக் போட்டி டிராவில் முடிந்தது.

நேற்று உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியில் சுவிட்சர்லாந்தும் பிரேசிலும் மோதின.   ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த இந்த போட்டியின் ஆரம்பம் முதலே விருவிருப்புடன் இருந்தது.   சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய இரு அணிகளுமே வெற்றி ஒன்றே தங்கள் இலக்கு என தெரிவித்திருந்தனர்.

பிரேசில் அணி இதுவரை பல முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.  கடந்த 1931 முதல் ஒவ்வொரு போட்டியிலும் பிரேசிலுக்கு பெருமளவு ரசிகர்கள் உள்ளனர்.   துவக்க ஆட்டத்தில் பிரேசில் இதுவரை 18 போட்டிகளில் 16 முறை வென்றுள்ளது.   கடந்த 1934 ஆம் வருடம் ஸ்பெயினிடம் தோற்றுள்ளது.  கடந்த 1950 ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய போது அந்தப் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

எனவே சுவிட்சர்லாந்து அணிக்கு இந்த போட்டி ஒரு சவாலாக இருந்தது.   ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்த போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்து போட்டி டிராவில் முடிவடைந்தது.   இந்த போட்டியின் மூலம் பிரேசில் மற்றொரு துவக்க ஆட்டத்தில் வெற்றியை இழந்துள்ளது.   அதே நேரத்தில்  68 வருடங்கள் கழித்து மீண்டும் சுவிட்சர்லாந்துடன் துவக்க ஆட்டத்தில் டிரா ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: FIFA 2018 : Brazil vs Switzerland league match ended in draw
-=-