உலகக் கோப்பை கால்பந்து 2018 : போர்ச்சுகல் தலைவர் ரொனால்டோவின் ஹாட்ரிக் கோல்

சோச்சி

நேற்று நடந்த உலகக் கோப்பை 2018 லீக் போட்டியில் போர்ச்சுகல் – ஸ்பெயின் போட்டியில் போர்ச்சுகல் அணி தலைவர் கிறிஸ்டினோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

இதுவரை நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் போர்ச்சுகல் அணியை அதன் தலைவர் கிறிஸ்டினோ ரொனால்டோ இருமுறை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளார்.   இந்த போட்டியில் அவர் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.  அது மட்டும் இன்றி உலகக் கால்பந்து வீரர்களில் அதிக சாதனை புரிந்த வீரராகவும் இவர் உள்ளார்.

இந்த போட்டியில் அவரும் ரபேலும் இணைந்து போட்டியின் 88 ஆம் நிமிடத்தில் அடித்த கோல் போர்ச்சுகல் அணி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.   34 வயதான ரொனால்டோ இது வரை 151 போட்டிகளில் 84 கோல்கள் அடித்துள்ளார்.   இந்த  வரிசையில் இவர் நான்காவதாக உள்ளார்.   ஏற்கனவே பிரேசில் நாட்டின் பிலே, ஜெர்மனியின் உவே சீலர் மற்றும் மிரொச்லாவ் குலோஸ்க்கு அடுத்தபடியாக ரொனால்டோ உள்ளார்.