உலகக் கோப்பை கால்பந்து 2018 : குரோஷியாவிடம் தோற்ற நைஜீரியா

காலினின்கிராட்

லகக் கோப்பை கால்பந்து 2018 டி பிரிவு லீக் போட்டியில் நைஜீரியாவை குரோஷியா தோற்கடித்தது.

நேற்று இரவு ரஷ்யாவின் காலினின்கிராடில் குரூப் டி லீக் போட்டி நடந்தது.   இதில் நைஜீரியாவும் குரோஷியாவும் மோதின.   விருவிருப்பான ஆட்டத்தில் குரோஷியா வீரர் எடெபோ தங்கள் அணியின் முதல் கோலை ஆட்டத்தின் 32 ஆவது நிமிடத்தில் அடித்தார்.   அதை சமன் செய்ய நைஜீரியா வீரர்கள் போராடினர்.

ஆனால் விடாமல் அதை குரோஷிய அணி வீரர்கள் தடுத்தனர்.   குரோஷிய அணியின் மோட்ரிக் 71 ஆவது நிமிடத்தில் தனது அணியின் இரண்டாம் கொலை அடித்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னேற்றினார்.   மேலும் பாடுபட்ட நைஜீரிய அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

எனவே குரோஷிய அணி 2-0 கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றதாக அறிவிக்கப் பட்டது.