Random image

வைரலாக பரவும் குரோஷியா ஜனாதிபதியின் நடன வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி வெற்றிப்பெற்றதை அந்நாட்டின் ஜனாதிபதி மைதானத்தில் கொண்டாடும் வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. சனிக்கிழமை இரவு காலிறுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் குரோஷியா மற்றும் ரஷ்யா மோதின. இதில் இரு அணிகளும் 2-2 என்று கோல்கள் எடுத்தன. இறுதியாக அளிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் குரோஷியா 4-3 என்ற கோல்கள் கணக்கில் ரஷ்யாவை வென்றது.
president
இதனை தொடர்ந்து 1998ம் ஆண்டில் இருந்து முதல் முறையாக குரோஷியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியை நேரில் காண அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியான கொலிண்டா கிராபர் ரஷ்யாவிற்கு வந்திருந்தார். பாதுகாக்கப்பட்ட விஐபி இடத்தில் ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ், ஃபிஃபா போட்டியின் தலைவரான ஜியான்னி இன்ஃபண்டினோ ஆகியோருடன் இணைந்து கொலிண்டா க்ராபர் கால்பந்து போட்டியை கண்டு களித்தார்.

குரோஷியா அணி தனது இரண்டாவது கோலை அடித்த போது ஜனாதிபதியான கொலிண்டா ரஷ்யாவின் பிரதமர் முன்னிலையில் தனது கைகளை உயர்த்தி நடனமாடினார். அவர் நடனமாடிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரின் கொண்டாட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன.