உலகக் கோப்பை கால்பந்து 2018 : பெருவை வென்ற டென்மார்க்

ரன்ஸ்க்

லகக் கோப்பை கால்பந்து 2018 சி பிரிவு லீக் போட்டியில் பெரு அணியை டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது

நேற்று இரவு ரஷ்யாவின் சரன்ஸ்க் நகரில் நடந்த குரூப் சி லீக் போட்டியில் பெரு அணியும்  டென்மார்க் அணியும்  மோதின.   இவ்விரு அணிகளில் பெரு அணி 36 ஆண்டுகள் கழித்து தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.   டென்மார்க் அணி கடந்த 3 உலக்க் கோப்பையும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் திறமையுடன் விளையாடின.   டென்மார்க் அணியின் கிறிஸ்டியன் எரிக்சன் பல முறை கோல் அடிக்க முயன்றும் பெரு அணி தடுத்து நிறுத்தியது.  போட்டி ஆரம்பித்த 43 நிமிடத்தில் பெருவுக்கு பெனால்டி தரப்பட்டது.  இருப்பினும் பெரு அணியின் கிறிஸ்டியன் குவே அடித்த கோல் பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்று விட்டது.  முதல் பாதி 0-0 என முடிந்தது.

விருவிருப்பாக தொடங்கிய இரண்டாம் பாதியின் 59 ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் யுராரி பெல்சன் ஒரு கோல் அடித்தார்.    அதைத் தொடர்ந்து பெரு அணி கடுமையாக முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை.  அதை ஒட்டி டென்மார்க் அணி 1-0 என்னும் கோல் கணக்கில் பெருவை வென்றதாக அறிவிக்கப்பட்டது.