Random image

உலகக் கோப்பை கால்பந்து 2018 : இறுதிப் போட்டி நேரம்

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து 2018ன் போட்டி நேரம் இதோ

உலகக் கோப்பை கால்பந்து 2018 இன் இறுதிப் போட்டி இன்று நடை பெற உள்ளது.  இதில் பிரான்சும் குரோஷியாவும் மோதுகின்றன.

அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி பெல்ஜியம் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அறை இறுதிப் போட்டியில் குரோஷியா அணி இங்கிலாந்து அணியை வென்று இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளது.

நேற்று நடந்த மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை வென்று பெல்ஜியம் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இன்றைய இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க இருக்கிறது.